கோதுமை கேக்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்,
சர்க்கரை பொடித்தது – 11/4 கப் ,
நெய் – 1/2 கப்பிற்கு குறைவாக ,
பால் – 1/2 (அ) 1 கப்,
ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி,
முந்திரித்துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை

கோதுமை மாவை நன்றாக மணம் வரும் வரை நெய் விடாமல் வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, பால், நெய் கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை பிரஷர் குக்கரில் அல்லது பிரஷர் பேனில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். வெந்த பிறகு அதன் மேல் மிதந்து வரும் நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி முந்திரித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்தப் பிறகு பாத்திரத்திலுள்ள வெந்த மாவையும் சேர்த்து ஏலப்பொடி போட்டு நான்கு நிமிடங்கள் உப்புமாவைப் போல் கிளறினால் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஒன்றிரண்டு நிமிடங்களில் துண்டுகள் செய்து விடலாம்.

About The Author