கோதுமை காபி

தேவையான பொருட்கள்:

கோதுமை – 100 gms
தண்ணீர் – 2 முதல் 5 கப்
பால் – 11/2 கப்
பனங்கற்கண்டு (அ) வெல்லம் – சுவைக்கு.

செய்முறை:

கோதுமையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் கரகரவெனப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து கோதுமைப் பவுடருடன் துளசி இலைகளை சேர்த்து மூடி, மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வைத்து வடிகட்டி, பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகவும்.

N.B:
சர்க்கரை வேண்டுமானால் அவரவர் விருப்பபடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனை வெல்லமோ, கற்கண்டோ ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவ்வகை பானங்கள் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.”

About The Author