1. கேரட் மில்க் ஷேக்
கேரட்டின் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து நன்கு குளிரவும் பருகினால் சுவையாக இருக்கும்.
2. தக்காளி ஜூஸ்
தக்காளிப் பழங்களை நன்றாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து ஜூஸ் செய்து கொள்ளவும். அதனுடன் உப்பு, குறு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழம் பிழிந்துவிட்டு, தேவையான புதினா மற்றும் துளசி சேர்த்துக் குடிக்கலாம்.
3. தக்காளி ப்யுரி
ஒரு கிலோ தக்காளிப் பழத்தை நன்றாகக் கழுவி சுடுதண்ணீரில் போட்டு தோலை உரித்தெடுக்கவும். தோல் நீக்கிய பழங்களை மிக்சியில் போட்டு சில நிமிடங்கள் ஓட்டி விழுதாக்கியபின், ¾ தேக்கரண்டி KMS சேர்த்து, சிறிது citric acid சேர்த்துக் கலந்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளவும். ஜில்லென்று தேவையான பொழுது பருகலாம்.
4. பச்சைப்பயறு ட்ரிங்க்
பச்சைப்பயறை சற்று மணம் வரும் வரை வறுக்கவும். ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவலுடன் ஒரு மேசைக்கரண்டி பயறை சேர்த்து அரைத்து தேவையான அளவு தண்ணீரைக் கலந்து ஏலமும், வெல்லமும் சேர்த்துக் குடிக்கவும். விரும்பினால் சிறிது பாலையும் சேர்த்துக் குடிக்கலாம்.
5. கோக்கம் ஜூஸ்
கோக்கம் என்பது உடுப்பி, மங்களூரில் கிடைக்கும் ஒரு பழம். பித்தத்தைக் குறைக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் தலை சுற்றலுக்கு சிறந்த மருந்தாக செயல்படும். இப்பழத்தை சுடு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மிகவும் நல்லது. Preservative சேர்க்கத் தேவையில்லை. புளிப்புச் சுவை இருப்பதால் சேர்க்கத் தேவையில்லை. இந்தப் பழ ரசத்துடன் சோடா மிக்ஸ் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
“