கொத்துமல்லி சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ½ கோப்பை
கொத்துமல்லி – 1 சிறிய கட்டு
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 மேசைக் கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை – 2
ஏலக்காய் – 2

செய்முறை:

பச்சரிசியுடன் சிறிது உப்புச் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஆய்ந்து வைத்திருக்கும் கொத்துமல்லியைப் போட்டு வதக்கிய பின், பச்சை மிளகாய், உப்புச் சேர்த்து மேலும் நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை சாதத்தில் போட்டு நன்கு கிளறுங்கள்.

கடைசியாக வாணலியில் சிறிது நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளித்து, கொத்துமல்லி சாதத்தில் கலந்துவிட்டால் சுவையான கொத்துமல்லி சாதம் தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author