அருகாமை மட்டுமல்ல,
வருவாயும் தேவையென்பதால்
சமாதானமாகிக் காத்திருக்கின்றன
உறவுகள்…
சவாலான இரட்டைப்
பாதைப் பயணத்தால்
தவிர்க்க முடிவதில்லை
தாமதங்களை…
முடிவின்றித் தொடரும்
இலக்கை நோக்கிய
தொலைதூர ஓட்டத்தால்
இயந்திரமாகிப் போனாலும்,
இணையம் வழியாக
கணினித் திரையில்
கைநீட்டி அழைக்கும்
குழந்தையைப்
பார்க்கும் போது மட்டும்
உயிர்த்தெழுகிறது மனசு..!!!