கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை – ஒரு உண்மைக் கதை

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.

கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.

குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.

(மீதி அடுத்த வாரம்)”

About The Author

40 Comments

  1. தமிழ்த்தேனீ

    கை கால் இல்லாவிடினும்
    நம்பிக்கை என்னும் விதை விருட்ஷமாக இவர் மனதில்
    இருக்கும் வரை இவர்தான் முழுமையான மனிதர்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. kavitha

    ஆfடெர் ஈ கவெ ரெஅட் திச் அர்டிcலெ, ஒஉர் ப்ரொப்லெம் இச் நொதிங் cஒம்பரெ டொ கிம். Tகெ பெர்சொன் நிcக் நிதொஉட் கிச் கன்ட்ச் அன்ட் லெக்ச், கெ கச் மடெ அ லொட் ஒf சுccஎச்ச். Fஒர் உச் தெ கொட் கிவெச் கோட் கன்ட்ச் அன்ட் லெக்ச் சொ நெ cஅன் அல்சொ மகெ சுccஎச்ச்fஉல் லிfஎ லிகெ கிம். Tகன்க்யொஉ, டொ கிவெ உச் நொன்டெர்fஉல் அர்டிcலெ ந்கிச் கிவெச் உச் அ செல்fcஒன்fஇடென்cஎ அன்ட் எனெர்க்ய் டொ ஒஉர் லிfஎ

  3. maleek

    இந்த நிலையிலும் முகத்தில் எவ்வளவு புன்னகை-மனதில் எவ்வளவு தெம்பு
    உங்களை நினைக்க பெருமையகாவும் பொறாமையாகவும் இருக்கிறது நிக்

  4. JACOBDANIEL

    நிக் வியுஜிசிக் நன்பர் டானியின் வாழ்த்துகல் , ஊணம் என்பது உடல் அளவில் இருந்தால் குறைவு ஒன்றுமில்லை,ஊணம் என்பது மனதில் இருக்ககுடாது.கிருஷ்து ஏசு உன்னுடன் எப்பொதும் இருக்கும்
    அன்புடன்
    டானியல்
    உஜ்ஜயனி , மத்தியப்ரதெசம் , இந்தியா

  5. M.Prema Surendranath

    வலியில்லாமல் வாழ்க்கையில்லை. விதிப்படி, வினைப்படி வாழ வேண்டிய வாழ்க்கை முறையை அவரவர் எதிர்கொள்வதில் தான் வெற்றி தோல்விகள் அமைகின்றன. மகாத்மா ‘அரிஜன்’ என்று அழைக்காமல் ‘கடவுளின் குழன்தைகள்’ என்று அவர்களை சிறப்பித்தார். நிக் வியுஜிசிக் போண்றோரும் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்களாதலால் பொறுமையும் பாசமும் பெற்ற தாய் தன்தையருக்கு சிறப்புப் பரிசாக அளிக்கிறார் போலும்.

  6. raj

    இன்னமும் எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. இவர் ஒரு அசாதரணமான மனிதர்.

    சோமு.

  7. karthiga

    கன்டிப்பாக சாதித்து விடுவாய். சின்ன விசயதுக்கு கவலைபட்ட நான் உன்னை பார்த்த பின் மாரிவிட்டன்.
    இப்படிக்கு,
    கார்த்திகா.

  8. shanthi

    எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. இந்த நிலையிலும் முகத்தில் எவ்வளவு புன்னகை-மனதில் எவ்வளவு தெம்பு உங்களை நினைக்க பெருமையகாவும் பொறாமையாகவும் இருக்கிறது நிக்

  9. Tim

    எனக்கு பேச வார்த்தைகள் எலவில்லை. நீங்கள் ஒரு அசாதரணமான மனிதர். உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது.

  10. Timothy Asir

    எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது.

  11. v.uma maheswari

    அன்பு நிக் இண்று எனக்கு பிரந்தனால் உஙல் வாழ்கை எனதுபிரந்த நாலுக்கு கடவுல் கொடுத மிகபெரிஅ பரிசக நான் நினைகிரேன் ஏன்னா என் இடது கன் கூட ஒலி இல்லததுதான்

  12. gnanaguru

    ரொம்ப அர்புதமான மனிதர் நிட்சயம் வாழ்க்கைல வெல்வர்.

  13. jayanthi

    ரிஅல்ல்ய் யொஉ நில்ல் கெட் சுccஎச்ச் இன் யொஉர் லிfஎ. ஆச் உ அரெ கவிங் ப்லென்ட்ய் ஒf cஒன்fஇடென்cஎ இன் யொஉர் மின்ட் அன்ட் கெஅர்ட் யொஉ நில்ல் சுccஏட் எவெர் அன்ட் ம்ய் கெஅர்ட்fஉல் ப்லெச்சிங் டொ கெட் சுcஎச்ச் நிதொஉட் fஐலுரெ.

    யொஉர் சிச்டெர்

    ஜயந்தி V

  14. S. AnthonyMuthu

    அன்பரே நவீன்,
    படிக்கும்போதே கண்களில் நீர் நிறைந்து விட்டது.
    காயப்பட்டவனுக்குத்தான் இன்னொரு காயத்தின் வலி முழுமையாக உணர முடியும்.
    நல்ல வேளை,
    நான் பரவாயில்லை.
    எனக்கு இரண்டு கைகளை மட்டுமாவது கடவுள் தந்திருக்கிறாரே.
    நன்றி இறைவா!
    நேரமிருப்பின் கீழ்கண்ட வலைப்பூக்களை நுகர்ந்து பாருங்கள். (விரும்பினால் மட்டுமே)

    http://nsureshchennai.blogspot.com/

    http://madhumithaa.blogspot.com/2007_12_01_archive.html (தெய்வக்குழந்தை அந்தோனிமுத்து 18- 12- 2007)

    http://anthony.azhagi.com

    இதை எழுதிய உங்களின் கைகளுக்கு என் கண்னீர் முத்தங்கள்.

    அன்புடன்
    அந்தோனி முத்து

  15. Muthu

    நம்பிகை மட்டும் தான் நம்முடன் கடைசி வரை கூட வரும் .
    ணிக் நீ ஒரு முலுமையான மனிதன் .
    தாய் ,தந்தை மட்டும் தான் நம் இரு கன்கல் .

    அன்பே சிவம் !

  16. ishak

    அவர் எல்லொருக்கும் ஒரு முன்னுதாரனமா இருக்குராரு…………..
    அவர் வல்கையை ஜெவித்துவிட்டார் அல்ல் தெ பெச்ட் ……………

  17. abdul jabbar

    இறைவன் இவர் மூலமாக ஆரோக்கியமாக உள்ள மற்றவர்களுக்கு, தான் எவ்வளவு அருள் பாலித்திருக்கிறேன் என்பதை புரிய வைத்திருக்கிறான்.

  18. sulaiman

    வால்த வார்தை நல்லவனெ வால்க வலமுடன்

  19. jerald

    சுப்ரெர் கோட் அசிவெர் இ ப்ரய் fஒர் உ அல்நய்ச்

  20. wawoo

    இரைவன் ஒருவன் இருப்பதும் அவன் நினத்ததை நடத்தீக்காட்டுவதும் இதனால் தெளிவாகத் தெரிகின்ரது அவன் கட்டளைகளை நிறைவேற்றும் பாக்கியம் கிட்டுவது மிகவும் அவசியம்.

  21. selvi

    உஙல யெனகு ரொம்ப புடிசுருக்கு.இனிமெ யெனகு யென்த கஷ்டம் வன்தலும் உங மொகத நினைது கொல்வென்

  22. nsubramanian

    You are a strange wish of God. Perhaps the purpose of the creation is to instil hopes in the minds of people who despair as if they have lost every thing when there is slightest inconvenience or something goes against their wishes. After all they should be proud of as they are created with all their limbs and organs. I am really proud of your great parents. They have also suffered like you. You stand tall for all the confidence you exude.
    nsubramanian

Comments are closed.