கேரட் முந்திரி மில்க்ஷேக்

தேவையான பொருட்கள்:

கேரட்-2
முந்திரிப்பருப்பு – 1/2 கப்
பால்-1 லிட்டர்
சர்க்கரை-1 கப்
குங்குமப்பூ-சிறிது

செய்முறை:

முந்திரிப்பருப்பைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சிச், சர்க்கரை சேர்த்து மட்டான தழலில் கொதிக்க விடுங்கள். பிறகு கேரட்டைத் தோல் சீவிக் கழுவித் துருவிக் கொண்டு, சற்று வதக்குங்கள். முந்திரியை நீரை வடித்து விட்டு, கேரட்டுடன் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பாலுடன் இந்த விழுதைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் பாலில் கரைத்த குங்குமப்பூவையும் சேர்த்து மில்க்ஷேக்கைச் சூடாகவோ, குளிர வைத்தோ பருகினால் அதன் பிறகு இந்தச் செய்முறையை மறக்கவே மாட்டீர்கள்!

About The Author