குழந்தைகளின் தனித்தன்மையை அவர்கள் விரும்பும் பயிற்சிகளின் மூலம் எவ்வாறு வெளிக்கொணரலாம் என்பதை இங்கு காண்போம்.
I. அறிவுக்கு :
1. கணித விளையாட்டு
எண்கள், விகிதங்கள், பகுதிகள் என்று கணித சம்பந்தமான சொற்களைப் பாடங்களின் மூலமாக சொல்வதால் மட்டும் புரியாது. அதற்கு பதிலாக ஒரு கேக் வாங்கி வந்து அதனை வெட்டி, கால் பாகம், அரை பாகம், முக்கால் பாகம் என்றுவிளக்குவதன் மூலம் எளிதாக அவர்களுக்குப் புரியவைக்கலாம். மேலும் சிறு சிறு காகிதத் துண்டுகளை ஒன்று சேர்ப்பதன் மூலமாகவும் எளிமையாக அவர்கள் மனதில் பதிய வைக்கலாம்.
2. விதிமுறைகளை மீறலாம்
"A Beautiful mind" என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ஜான் நாஷ் என்ற கணித மேதை, சுவர் மற்றும் ஜன்னல்களில் எழுதுவார். எண்களைக் கண்டு பயப்படாமல் அவைகளிடம் ஆதிக்கம் செலுத்துவார். அதுபோல் நீங்களும் உங்கள் குழந்தைகளை எளிதாக அழிக்கக்கூடிய பேனாக்களைக் கொண்டு படுக்கையறை ஜன்னல்களில் எழுத அனுமதிக்கலாம். இது குழந்தைகளுக்கு விளையாட்டாக அமைவதோடு கணிதம் கற்கவும் உதவும். எளிதாக அகற்றக்கூடிய காகிதங்களையும் சுவர்களில் ஒட்டி அவர்களை எழுதச் சொல்லி உற்சாகப் படுத்தலாம்
3. குழந்தைகளின் பிறந்த நாள் விழா
உங்களுடைய குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பை அறிய வைப்பது அவர்களுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அவர்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் முடிவு செய்துள்ள பட்ஜெட் பற்றி அவர்களுக்குத் தெரிவியுங்கள். ஒரு குறிப்பிட்ட பகுதி விழாவுக்காகவும், மீதமிருப்பது பரிசுகளுக்காகவென்றும் தெளிவாகப் பிரித்துச் சொல்லுங்கள். விழா ஏற்பாடுகளில் அவர்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள். செலவுக் கணக்குகளை அவர்களை வைத்தே எழுத வையுங்கள். அவர்களுக்குப் பணத்தின் அருமையை சிறிய வயதிலேயே புரிய வைக்க இதுபோன்ற வழிகள் மிக்க உதவியாக இருக்கும்
மேலும்
குழந்தைகளுக்கு டயரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு எழுதும் பழக்கத்தையும் எழுத்தின்மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தலாம். படுக்கச் செல்லும்முன் தினமும் புத்தகம் ஒன்றைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவர்களுக்கு மிகச் சிறந்த தூண்டுதலாக அமையும்.
(தொடரும்)“
vv
இங்கு கொடுக்கப்பட்டுல்ல கருத்துக்கல் யாவும் நடப்பியல் உன்மை மட்ரும் எலிதில்சாத்தியப் படக்கூடியவை.