II. ஆரோக்கியத்திற்கு :
உங்கள் குழந்தைகளிடம் கவனக் குறைவு அல்லது அதிகத் துடிப்பு போன்ற பிரச்சினைகள் இருப்பதை அறிந்தால், அவர்களுடைய உணவுப் பழக்க கவனியுங்கள். நல்ல சத்தான உணவுப் பழக்கத்தின் மூலம் அவர்களுடைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தலாம்.
1. எளிமையே சிறந்தது
ஆம்லெட், நூடுல்ஸ், வெண்ணெய் அல்லது தக்காளி ருசி கொண்ட பாஸ்தா போன்றவைகளும் வித்தியாசமான, சத்தான மற்றும் ஆரோக்கியம் தரும் உணவாக அமையும்.
2. சாப்பிடு (அ) விட்டுவிடு
உணவைத் தட்டிலிட்டு உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்காக மாற்று உணவு அளிக்காதீர்கள். முழுவதும் உண்ணாமல் சிறிதளவு அவர்கள் உண்டாலும் போதுமானதே. அவர்கள் சத்தான உணவு வகைகளை முயற்சிக்க வேண்டுமென்பதே நம்முடைய குறிக்கோள்.
அவர்களுடைய உட்கொள்ளுமளவு குறைவாக இருப்பின் அதனை அதிகரிக்க அவர்களுடைய நண்பர்களையும் உண்ண அழையுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து உண்ணும்போது அவர்கள் அதிகம் உண்பதைக் காணலாம்.அதே போல, சத்தான உணவு வகைகளை நண்பர்கள் உண்பதைக்கண்டு அவர்களும் அவைகளை உண்ணலாம்.
3. பசி இருக்கா.. இல்லையா?
சில குழந்தைகள் தொடர்ச்சியாகப் பசியெடுப்பதாகச் சொல்லி அழுவார்கள். உண்மையாகவே அவர்களுக்கு பசிக்கிறதா அல்லது தாகமெடுக்கிறதா என்று பரிசோதியுங்கள். பசிக்கும், தாகத்திற்கும் வேறுபாடு அவர்களுக்குத் தெரியாது. எனவே முதலில் அவர்களைக் குடிநீரை அருந்தச் சொல்லுங்கள். பிறகும் பசியென்றால் உணவளியுங்கள்.
மேலும்
பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் தருபவையே. பெற்றோர்கள் அனைவரும் கீரையில் மட்டுமே அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்துள்ளதாக நினைக்கின்றனர். ஆனால் கேரட் போன்ற இதர காய்கறிகளிலும் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
(தொடரும்)“