குல்கந்து பூசணி அல்வா

தேவையான பொருட்கள்:

சற்றே முற்றிய பூசணிக்காயை தோல் நீக்கி துருவி சாறு பிழிந்து எடுத்த துருவல் – 4 கப் ,
பிழிந்த நீரில் கரைத்த சீனி – 2 கப் ,
பொன்னிறமாக வறுத்து எடுத்த ரவை – 4 மேசைக்கரண்டி,
துருவிய தேங்காய் மற்றும், ஊற வைத்து மேல் தோலை நீக்கிய சில பாதாம்
பருப்புடன் சிறிது கசகசாவும் சேர்த்து அரைத்த விழுது1/2 கப் ,
குல்கந்து – 3 தேக்கரண்டி ,
ரோஸ் எஸ்ஸென்ஸ் – சில துளிகள்,
விருப்பமான கலர் – தேவையானால் ,
நல்ல நெய் – 4 மேசைக்கரண்டி .

செய்முறை:

நல்ல கனத்த வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை விட்டு ரவையை வறுத்து எடுத்த பிறகு மீண்டும் ஒரு மேசைக்கரண்டி நெய்யை விட்டு பூசணித்துருவலை நீர் வற்றும் வரை வதக்கி எடுத்த பிறகு அரைத்த விழுதையும் வதக்கவும். வதக்கியதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு சர்க்கரை கலந்த பூசணி நீருடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சீனி கரைந்து கொதி வந்ததும்(ஒரு கம்பிக்கு மேல்)பூசணித்துருவலை சேர்த்து கிளறி, அரைத்த விழுதையும் வறுத்த ரவையையும் சேர்த்து மீதியுள்ள நெய்யையும் சேர்த்து குறைந்த தழலில் கை விடாமல் சுமார் பதினைந்து (அ) 20 நிமிடங்கள் கிளறி (விரும்பினால்)கலரும், எஸ்ஸென்ஸும் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். அல்வாவின் மீது குல்கந்தை சமமாகப் பரப்பி சற்று ஆறியதும் தேவையான அளவில் துண்டுகள் போடவும்.

About The Author