பற்கள்
என்னற்க
சிகரெட் என்க.
உதடுகள்
என்பவை
நெருப்பெனக் காண்க
****
ஓடாத கடிகாரம்!
கோச்சிங் தருகிறான்
ஓட்டப்பந்தய வீரன்.
****
பாவிகளே என்கிறான்
நடுச்சந்தியில் நின்று
அநாதையோ?
****
குகை என்பது
யோனி துவாரம்
கானகம் என்னற்க
கர்ப்பப்பை என்க.
****
வானம்
எனக்கொரு போதிமரம்
நான்
மரத்தடி ஜோசியன்
****
வாய்க்கு உண்டு
மூடிகள்
காதுகள்
கதவுகள் அற்றவை
“