குறுங்கவிதைகள் (4)

முத்தமிட்டது

அச்சு யந்திரம்!

கர்ப்பமானது

காகிதம்.

தீவலம் வந்து

எனைப் பெற்ற அன்னைக்கு

வலம் வந்து

தீ வைக்கிறேன்.

கர்ப்பப்பைக்குள்

கால் உதைப்பு

சிரிக்கிறாள்

ஊனப் பெண்.

வயத்து வலி

ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்

பாத்ரூம், டாய்லெட்

எண்ணிக்கை அதிகம்.

மான்வேட்டைக்காய்

ஒளிந்து கொண்டனன்,

புலியின் உருமலில்

ஓட்டமெடுத்தனன்.

அனஸ்தெடிஸ்ட்

மயங்கினார்!

நோயாளியின் அழகில்.

About The Author

1 Comment

  1. Mannai Pasanthy

    மிகவும் ரசித்தேன். அருமையான குறுங்கவிதைகள். நன்றி. மன்னை பாசந்தி

Comments are closed.