குடைமிளகாய் பட்டாணி சாதம்

தேவையானவை:

சீரகச் சம்பா அரிசி – இரண்டு கோப்பை,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 4,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
பட்டாணி – அரை கோப்பை,
பச்சை, சிவப்புக் குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – அரை கோப்பை.

அரைக்க:

பட்டை – 1,
வெங்காயம் – 1,
தேங்காய்த் துருவல் – ஒரு தேக்கரண்டி,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 3 பல்,
சோம்பு – அரை தேக்கரண்டி.

தாளிக்க:
புதினா – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்துமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை:

அரிசியை உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்குங்கள்.

பட்டாணியைத் தனியாக வேக வைத்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் இலேசாக வதக்கி ஒன்றாக அரைத்தெடுக்க வேண்டும்.

கனமான பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, புதினா, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் சிறிது உப்பு, குடைமிளகாய், பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள்.

பிறகு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, கொத்துமல்லி தூவி இறக்க வேண்டியதுதான்.

சுவையான குடைமிளகாய் பட்டாணி சாதம் தயார்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author