குடமிளகாய் பனீர் வறுவல்

தேவையான பொருட்கள்:

பனீர் – 200கிராம்
பச்சை குடமிளகாய் – 1 சிறியது
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – சிறிதளவு
பச்சை மிளகாய் சாஸ் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.

குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும்.

கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான குடமிளகாய் பனீர் வறுவல் தயார்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author