காவலாய் இருத்தல்
கூலிப்பணியில்லை
கையில் பிரம்புடனோ வாளுடனோ
காவலாளியாய் வேஷமிடல்
அவனுக்கு அழகில்லை!
காவலின் அருமையறிந்து
ஒரு நாயைப்போல
காக்கணும் காவல்!
நாயைப்போலவே பொறுப்பாயும்
கூர்மையாயும் இருக்கணும்!
நாய்க்கான அதீத விழிப்புணர்வும்
அவனுக்கு அவசியம்!
தன் எஜமானிடம் கொண்ட
அர்ப்பணிப்புணர்வு
முக்கியமாகக் கைவரணும் அவனுக்கு!
அடுத்தவர் காலை வாரிடும்
மானுஷ்யக்குணம்
நாய்களுக்கில்லாததை
அறிந்துணர்ந்து
நாயொன்றைத் தன்
குருவாய் ஏற்கணும் அவன்-
அதிபெருங் காவலாளியாய்
அகிலம் காக்க!