தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 3,
கோஸ் – சிறிதளவு (நறுக்கியது),
இஞ்சி – பூண்டு விழுது – அரை தேக்கரண்டி,
சோம்பு – அரை தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி,
கரம் மசாலாத் தூள் – அரை தேக்கரண்டி,
கொத்துமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காளானை நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள்.
பிறகு அதனுடன், காளான், கோஸ், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத் தூள் சேருங்கள்.
தண்ணீர் விடாமல், காளான் வேகும் வரை வேகவிட்டு, கடைசியாகக் கொத்துமல்லி தூவி இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்க வேண்டியதுதான். சுவையான காளான் வறுவல் தயார்!பிரைடு ரைஸுக்குத் தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும்.
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!