காற்று – 9

23. எந்த வேலையையும்
தள்ளிப் போடுவதில்லை
காற்று.
வீசுவதானாலும் சரி..
புரட்டிப் போடுவதானாலும் சரி..
எப்போதும் அதன்
இயக்கம் நிற்பதில்லை
யாருக்காகவும்..
எதற்காகவும்.

24. காற்றைப் படம்
வரைய ஆசை.
வரைந்த பின் பார்த்தால்
காற்றின் விளைவுகள் மட்டுமே.
கண் மூடி மனசுக்குள்
காற்றின் உருவம்
தூரிகைக்கு அகப்படாத
அழகாய் காற்று!

25. யுகங்கள்தோறும் காற்று
வீசிக் கொண்டிருக்கிறது.
இறப்பற்ற இறைவனைப் போல.
எத்தனை யுத்தங்கள்..
எத்தனை முத்தங்கள்..
எல்லாம் பார்த்தும்
புத்தம்புதிதாய்
காற்று.
வசப்பட்ட மாதிரி
பிரமையில் மனிதர்கள்.
எதுவும் அதன் வசமாய்..
காற்றின் இயக்கம்.

About The Author