காற்று (3)

5. மனிதர்களற்ற ஊஞ்சலில்
ஆடுகிறது காற்று.

6. கையைப் பிடித்து
அழைத்துச் செல்கிறது காற்று.
புலனாகாப் பெருவெளியில்
அதன் பயணம்.
வழியெல்லாம் உரசிச் செல்லும்
வெவ்வேறு அனுபவங்களை
நிதானிக்கக் கூட நேரமில்லை.
ஏதேனும் ஒரு மேகத்தின் மீது நின்று
சுவாசப்படுத்திப் போகலாமென
சொல்வதற்குள்
காற்று என் கையை
விட்டு விட்டது விளையாட்டாய்.
பதறிக் கீழே விழும் பாதை பார்க்க
கீழே நின்று தாங்கிப் பிடிக்கும்
என் சிநேகிதனாய் காற்று!

7. எந்த ஊருக்குப் போனாலும்
காற்றைச் சந்திக்கலாம்!
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’
காற்றுக்கு.

About The Author