காற்று-10

26. விட்டுப் போவதில்லை
காற்று..
போனால்..
திரும்புவதும் இல்லை.
நட்புடன் காற்று!

27. பூமிக்குள் பிளந்து
இறங்குகிறது.
நீருக்குள்ளும் வாசம்.
அண்ட வெளியெங்கும் கூட.
தீ ஜொலிப்பதே இதனால்.
எல்லாமாக.. எல்லாமாகி..
காற்று!

28. நகர்வலம் வருகிறேன்
காற்றுடன்.
வீடு திரும்பியதும்
உடல், துணி பார்த்து
முகஞ்சுளிப்பு..
எத்தனை அழுக்கு.. புழுதி..
மாறாத புன்னகையுடன்
என்னருகில் காற்று.

29. பார்க்காமலே காதல்
காற்றோடு
எனக்கு.
பார்த்து நிராகரித்துப் போகிற
மனுசங்க நடுவே
எனக்காகவும் இயங்குகிற
காற்றோடு காதல்
இயல்புதானே!

About The Author