காற்று

8. எப்போதும் ஓடி வரும்
மழலையாய் காற்று.
நிராகரிக்கப்பட முடியாத
காதலாய் காற்று.
நித்திரையில் சுகமான
கனவாய் காற்று.
எப்போதும் மாறாத
மலர்ச்சியுடன் காற்று.

9. காற்றின் வழித்தடம்
எப்படித் தெரியும்?
எதுவும் சொல்லாமல் செல்லும்
காற்று
எப்போதும் சுற்றி நிற்பதால்
நேற்றைய காற்றும்
இன்றைய காற்றும்
வெவ்வேறு என்று
புரிபடாமலே
வாழ்வின் இறுதி மூச்சும்
விடுபட்ட காற்றாய்..
கடைசி நிமிடம்
காற்றிடம் ஏதேனும் சொல்ல
என்ன வைத்திருக்கிறேன்..
சுவாசிக்க மறப்பதைத் தவிர!

10. காற்று என்கிற வார்த்தை
இல்லாமல்
கவிதை ஒன்று
எழுத நினைத்தேன்.
மூச்சு திணறியது.
பெருமூச்சுடன்
வெற்றுத் தாளைப்
பார்த்தேன்.
எதுவும் எழுதப் படாமலே
அன்றைய தினம்!

About The Author

2 Comments

  1. Balagopalan Nambiar

    Vanakkam, Kaatru patriya unggalin karppanai abaaram. Thelivaaga, azhagaaga, kaatrin arumai perumaiyai veru konaththil solli irukkireergal. Vaazhththugal

    Anbudan
    Balagopalan Nambiar
    Klang,
    Selangor, Malaysia

  2. rishaban

    வணக்கம். மிக்க நன்றி. தங்கள் பாராட்டு எனக்கு உற்சாகம் தருகிறது.
    ரிஷபன்

Comments are closed.