கோபத்தோடு என்னிடம் வந்து
"நீ என்னிடம் சிக்கிக் கொண்டாயாம்?"
தோழிகளின் கேலியால் சிவந்து நின்றாள்
"ஆம்" என்றேன்..
"எப்படி?" என்றாள்
"உன் கொலுசுகளில் விரும்பி சிக்கிக்கொண்ட
சுடிதார் நூல் போல சுகமாய் மாட்டிக்கொண்டேன்
உன்னிடம் நான்…." என்றேன்
கோபம் போய் "ஆஹா கவிதை!!" என்று
என்னைக் கட்டிக்கொண்டாள்
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்…..
***
ஏதோ இரவல் கேட்க உன் வீடு வந்தவனிடம்
உன் அப்பா குசலம் விசாரிக்க..
கண்கள் உன்னைத் தேடி பதில் தடுமாற…
சத்தமாய்க் கேட்டது
உன் அண்ணன் குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தம்..
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்..
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
காதல் மட்டுமல்ல….
உஙல் கவிதையும் சொர்க்கம் தான்….விஜய்…!
இன்னும் எப்படி அழகாக வாழ்துவது என்ட்ரு தெரியவில்லை