கல்லூரி முடித்து
பிரிய மனமில்லாமல் பிரியும்
மாணவனைப் போல்
என் படுக்கையிலிருந்து பிரிந்தவளிடம்
ஒரு முத்தம் கேட்டேன்
சிணுங்கி எழுந்தாள்
ஒரு சிணுங்கல் கேட்டேன்
வெட்கி சிவந்தாள்
ஒரு வெட்கம் கேட்டேன்
தலையில் செல்லமாய் இடித்தாள்
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம் தான்….
***
நீ வண்ணப்பொடிகளைக் கொண்டு
மும்முரமாய் கோலம் போடுகையில்
"ஒரு வண்ணமயில் கோலம் போடுதே!"
என்றபடி விரலால் உன் கன்னத்தில்
மஞ்சள் கோடு போட்டேன்
நீ உதட்டைப் பிதுக்கி
"சீ…" எனும்போது
உன் வெட்கமும் கோபமும்
சேர்ந்து பொங்கி
சிவந்து போனது மஞ்சள் கோடு…
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்….
***
கடற்கரை இரவொன்றில்
நீ வரும்வரை நிலாவை
ரசித்திருந்தேன்
அதை அறிந்த நீ
என்னை முறைத்து
"அவளோடு என்ன பேச்சு?"
என்றாய் கோபமாய்..
"அந்த வெண்ணிலா
கருநிலவாய் உருமாறி
உன் கண்களில் ஒன்றாய்
ஆக அனுமதி கேட்கிறது" என்றேன்
நொடியில் சிவந்தாய்
பிறகு சத்தமாய் சிரித்தாய்..
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்..
***
“
வெண்ணிலா – கருவிழி – நல்ல கற்பனை!
காதல் சொர்க்கம் தான்…… கல்யாணத்திற்கு பின் வரும் காதல். ரசனையான வரிகள். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
இனிமையான கவிதை, எதிர்பார்க்கிறேன் இன்னும் இது போன்ற பல படைப்புகளை அன்புடன், உதயா….
அருமை, அருமை, எவரையும் காதல் கொள்ள செய்துவிடும்!
அழகன கவிதை ரசிக்கும் படி உல்லது
இனிமையான உணர்ச்சி வெளிப்பாடு!!!
இனிமயான உனர்வுகல்