ஒரு செங்கல் கூட
கைவசம் இல்லை.
கட்டிடம் கட்டும்
உத்தேசமும் இல்லை..
ஒரு கவிதை கூட
எழுதத் தெரியவில்லை..
வார்த்தைகள் கைக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆடுகின்றன..
இதயம் துடிப்பது கூட
அதன் போக்கில்தான்..
எதற்காகவும் தவித்து
பழக்கம் இல்லை..
ஆனாலும் பெண்ணே..
உன்னைச் சந்தித்த பின்தான்
இதையெல்லாம் யோசித்தேன்..
முன்னாள் காதலர்களின்
அவஸ்தை பற்றி..
மகால்கள் பற்றி..
காவியங்கள் பற்றி..
எதுவுமே கற்றறியாமல்
காலங்கழித்த என் அறியாமை
இப்போதுதான் உறுத்துகிறது..
அவர்களை எல்லாம்
சகாப்தமாக்கி விட்டு
என்னை மட்டும்
சூனியமாக்கி விட்ட
பேரன்பே..
இன்னொரு பிறவி தா..
எனக்கு மட்டும்..
சரித்திரத்தில் நிலைக்க
ஒரு சாகசத்துடன்!
—————————–
நல்ல சிந்தனையோட்டம்!
ரிஷபரே,
உங்கள் வரிகள் ரிஷபத்தின் (காளையின்) கொம்புகளை போல, கூர்மையாகவும்,
கொம்பினால் கொய்யப்பட்டால், எந்த அளவிற்கு ஆழமாக உடலில் இறங்குமோ,
அதைவிட ஆழமாக அடிநெஞ்சில், ஆழ்நிலையில் இறங்கிவிட்டதைய்யா . . . .
ஆக்கங்கள் ஆயிரம்பல அள்ளி அள்ளி வழங்கவேண்டும் என்ற ஆசையோடு வாழ்த்தும் . . .
மார்கண்டேயன்.
அன்புள்ள ரிசபனுக்கு,
இவை எதனால் வடிக்கப்பட்டது என எனக்கு தெரியாது ஆனாலும் யாதார்த்தம் என்ற போர்வையை பொற்றிக்கெண்டு உள்ளது அது மட்டும் தெரியும் … என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் கவிப்பயணம் தொடரும் என்ற நம்பிக்கையுடன்..
என்றும்…அறிமுகம் இல்லாத!
ஒருத்தி! (நண்பி)
நந்தினி.^^!”