சோமாரஞ் சந்தையில ஒருநாச் சோறு உங்காம ஒத்த மாங்கா வாங்கித் தந்த
அம்மாளுக்குச் சேலை ஒண்ணு வாங்கித் தர ஆசையிருக்கு ..!
களத்து மேட்டுல கண்ணுறங்காமத் தண்ணி கட்டும்
அப்பனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் குடுக்கணும்னு மனசிருக்கு..!
பாவிமக நா பட்டம் வாங்குற ஆசையில அப்பங்காசப் பூரா
தொலச்சுப் போட்டேன்…
அரவயித்துக் கஞ்சிக்கே சம்பாரிக்கத் துப்பிலாம ஆச அத்தனையும்
அமுக்கிப் போட்டேன் மனசுக்குள்ள….
ஆசதா செத்துப்போச்சேனு கண்ணுறங்கப் பாத்தா ,
கம்ப்யூட்டர் படிச்சிருந்தா கார்லியே போலானு ஆத்தா ஏசறா….
ராத்தூக்கம் தொலஞ்சு போச்சு கண்ணுக்குள்ள ,
பாரமெல்லா சேந்துபோச்சு நெஞ்சுக்குள்ள …
தொலஞ்சுபோன வாழ்க்கையப் பாவிநா
எங்க போயித் தேடரது ? !…
கல்லாக் கொலஞ்சு போன எங்கப்பனம்மா தேகத்தை
எங்க போயி மீட்டரது ?!!….
ஒவ்வொரு வரிகளும்
அழகாக
செதுக்கியுள்ளீர்க்ள்…
உள்ளத்து உணர்வுதனை கொணர்ந்து விட்டீர்க்ள்..
அழகிய படைப்பு..
நன்றி
பாண்டியன்….
னிஜமாகவெ நெஞை உருகும் கவிதை குடும்ப வாழ்வு இப்படிதன் அம்மைஅ இரைவன் வரம் வேன்டும்
poem is super. keep try
TRY TO USING BETTER WARDS
ஒவ்வொரு வரிகளும்
அழகாக
செதுக்கியுள்ளீர்க்ள்…
உள்ளத்து உணர்வுதனை கொணர்ந்து விட்டீர்க்ள்..
அழகிய படைப்பு..
நன்றி
பாண்டியன்….