24
வீட்டு வாசலில் கவின்
கையில் அப்பளம்;
பார்த்த நிலா
பொறாமையால் அப்படிப்
பொரிந்து போனது.
25
படமாய்ப் பட்டாம்பூச்சி சட்டையில்;
பறக்கச் சொல்லிக் கவின்
சட்டையோடு அதை சன்னலுக்கு
வெளியே விட்டான்.
26
பச்சை மிளகாயைக் கொண்டு வந்து
தின்னச் சொன்னான் கவின்; தின்றால்
என் கண்ணில் நீர் பெருகும்;
தின்னாவிட்டால் கவின்
கண்ணில் நீர் பெருகும்
என் செய்ய?
“
கவின் கண்ணில் நீர் பெருகாமல் இருந்திட, உம் கண்ணில் நீர் பெருகினாலும் பின்னர் நீர் நீர் பருகினால் சரியாகி விடும்.என் செய்ய என வினவுகிறீரே, கவினுக்காக நீர் எதையும் செய்வீர். என்ன சரிதானே?
சங்கர்,நீர் பெருகுதல் பற்றிய கவிதை கரிசனத்திற்கு நீர் எழுதிய நீர் பெருகிய விமரிசனம் அருமை.
பட்டாம் பூச்சி சட்டையை அப்படியே ஜன்னலில் பரக்கவிட்ட கவினின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை என்ன சொல்ல?
ஈரோடார்க்கு இணை ஈரோடேதான்.
………கா.ன.கல்யாணசுந்தரம்.