கவின் குறு நூறு-5(13-15)

13

நீ உன் மாமா மாதிரி
போக்கிரியாகத்தான் வரப் போகிறாய்
என்ற அம்மாவிடம் அவன் கேட்டான்
‘அப்படீன்னா நீ யார் மாதிரி போக்கிரி?’

14

வயதான மெரீனாக் கரையருகே
குழந்தையாக நான்…
வயதான என்னருகே
குழந்தை கவின்….
வயதுகள் தரும் காலம்
வயதானதா? வயதாகாததா?

15

கையில் மாத்திரையோடு தாத்தா;
கொடுக்கக் கரிசனையாய்க் கொண்டுவந்த
தண்ணீரைக் குடித்துவிட்டுத்
தாத்தாவிடம் கவின்
நீட்டினான் வெறும் குவளையை.

About The Author

1 Comment

  1. P.K.sankar

    14-ஆம் எண் கவிதையில் குறிப்பிட்டபடி வயதானவர்கள் மெரீனாவில் கடலின் கரையருகே அமர்வதால் தான்
    அவர்களை சீ – நியர் சிடிசன் என்று அழைக்கிறோமோ?

Comments are closed.