கவின் குறு நூறு (4-6)

4
காக்கையைக் காட்டிக் கொண்டே
சோறூட்டிக் கொண்டிருந்த பாட்டியிடம்
கேட்டான் கவின்
‘அந்தக் காக்கா தன்னோட குழந்தைக்கு
யாரைக் காட்டிச் சோறூட்டும்?’

5
பொம்மையிடம் பேசிக் கொண்டிருக்கும்
கவின்
சொல்கிறான் பாட்டியிடம்
‘உஸ். குறுக்கே பேசாதே!’

6
தொலை இயக்கியைத்
தூக்கி அடித்தான் கவின்
சிறிய திரையின் மகாத் தொடரில்
அழுது கொண்டிருந்தவர்கள்
அதிர்ச்சியடைந்து
எங்கோ ஓடி மறைந்தனர்!

About The Author

2 Comments

  1. N.Venkataraman

    கவின்மிகு கவிதைகள். தொலைகாட்சி கவிதையில் மெகா தொடர்களின் அவலத்தையும், குழந்தைகளின் மனஓட்டத்தையும்
    தொலை இயக்கிமூலம் அழகாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர். – அரவிந்த் சந்திரா

  2. bharani

    மழலைச் செல்வத்தின் மகிமையை உணர்த்தும் கவிதைகள். எத்தனை அழகான பருவம்! அறிவான சிந்தனைகள்!!

Comments are closed.