கவின் குறு நூறு-4 (10-12)

10

கெட்டிக்காரன் கவின்
என்ன நாங்கள் பேசினாலும்
எளிதில் புரிகிறது அவனுக்கு;
எங்களுக்குத்தான்
என்ன சொல்கிறான் கவின்
என்பது புரிவதில்லை
சிலவேளைகளில் என்றால் என்ன பொருள்?

11

கவின் கையில் கிலுகிலுப்பையாக
இருக்க முடியாதவை –
காயத்ரி கையில் வீணை
சீனிவாசு கையில் மாண்டலின்
சசாங் கையில் புல்லாங்குழல்.

12

வண்ண எழுதியை எடுத்துக் கொடுத்து
வானில் உள்ள இளம்பிறை காட்டி
அப்பாவிடம் சொன்னான் கவின்
‘அதை முழுசா வரை!’

About The Author