கவின் குறு நூறு-31

91

அரங்கேறிய ஒரு குறும்பு
ஆறுவதற்குள் சுடச்சுடப்
பத்துக் குறும்புகள்…
அதுதான் கவின்!

92

உடைத்த பொம்மையை
ஒட்டித் தராத அப்பாவின்
கண்ணாடிக்கூடு
உடைந்து கொண்டிருக்கிறது.

93

பகலில் நட்சத்திரங்கள்
பளிச்சிட்டு மின்னுமா?
மின்னுகின்றனவே
கவின் கண்களில்!

About The Author