30
துவைத்துக் காய வைத்த
துணிகளைப் பாட்டி மடிக்கக்
கலைத்தெரிகிறான் கவின்;
துணிகளுக்கு மட்டும்தான்
அவன் பிஞ்சுவிரல்கள்
கலைப்பதில் உள்ள கலை அழகை
அனுபவிக்கத் தெரிகிறது.
31
படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு
வருகிறவர்களிடம் கேட்கிறான்
‘யார் வேண்டும்?’ என்று
அவனைப் பார்த்துவிட்ட பிறகு
அவனைத்தவிர வேறு
யார் வேண்டும் என்று கேட்க
யாருக்குத் தோன்றும்?
32
நீண்ட பலூனைக் கவின்
பின்பக்கமாகச் செருகி
‘உனக்கு வால் முளைத்துவிட்டது பார்த்தாயா’
என்றாள் அவன் அம்மா.
மறு நாள் குரங்கைப் பார்த்ததும்
கவின் அடம் பிடித்தான்
‘அந்தப் பலூனை வாங்கிக் கொடு!’
“
30-ஆவது கவிதை 2-ஆம் வரியில் கலைத்தெறிகிறான் ” என்று இருக்க வேண்டும்.என்ன சரிதானே”