77
கடற்கரையில் ஒரு நாள்
காந்தி நிற்பது போல்
நின்று காட்டினான் கவின்;
சிலைக்குள் இருந்த காந்தி
சிலிர்த்துப் போனார்
‘இவன் ஒருவனேனும்
என்னைப் போல நிற்கிறானே!’
78
கடலோரம் நெருங்கி நிற்கிறான் கவின்
அவன் கால்களைத் தொட்ட அலைகள்
சட்டென்று திரும்பி ஓடிச்
சொல்லுகின்றன எல்லா அலைகளிடமும்;
கடலின் கவிதைத் தொகுப்பில் ஒரு
புதிய பக்கம் அதிகரிக்கிறது.