கவின் குறு நூறு-20

60

பேரன் பள்ளிக்கூடம் போனால்தான்
தாத்தாவுக்குப் படிக்க வாய்ப்பு.

61

அவன் விளையாடப் பந்தை
உதைக்கிறான்
திசைகளுக்குள் போட்டி
அந்தப் பந்தைத் தொட.

62

வீட்டுக்கு வந்திருந்த மாமாவின்
கண்ணாடியைச் சட்டென்று பிடுங்கிக்
கவின் எங்கோ போட்டுவிட்டான்
மாமாபார்வை தேடிய இடங்களில்
எல்லாம் தெரிந்தன பெரிது
பெரிதாய் அவன் குறும்புகள்.

63

பரிசளிக்கத் தக்க குற்றங்கள்
குழந்தையிடம் பிறக்கின்றன குறும்புகளாய்.

About The Author