கவிதைகள்

பறவையில்லாக்கூடு

பறக்கக் கற்றுக் கொண்டன,
பறவைக் குஞ்சுகள்!
பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
மழலைப் பிஞ்சுகள்!
வெறுமையாகிப் போயின,
வீடும், கூடும்!

—————————————————
பாசம்

விலைபேசி விற்ற பசுவை
தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
வழிமறித்துக் காவலிருக்கும்
வளர்ப்பு நாய்!

——————————————————

காகிதக் கப்பல்

இந்தப் பெருமழைக்குத்
தாங்குமோ, தாங்காதோ
சிறுமண் குடிசையென்றே
அப்பனும், ஆத்தாவும்
விசனப்படும் விசயமறியாமல்,
ஓடும் நீரில் கப்பல் விட,
காகிதம் கேட்டு
அடம்பிடிக்கின்றனர்,
அவர்தம் அன்புப் பிள்ளைகள்!

——————————————————-
காத்திருப்புகள்

பொழுது புலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, பூக்கள்;
பூக்கள் மலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, தேனீக்கள்;
தேனீக்கள் கொணர்வதற்காகக்
காத்திருக்கிறது, தேனடை;
தேனடை நிறைவதற்காகக்
காத்திருக்கிறான், ஒருவன்;
அவன் வருகைக்காகக்
காத்திருக்கிறது,
அவனது குடும்பம்,
பசித்த வயிறுகளோடு!
———————————————————–

About The Author

11 Comments

  1. s sankaranarayanan

    excellent – good thoughts represented in a simple language – congratulations…

  2. vennila

    சூப்பர், நா ஒருதறவ சொன்னா நூரு தறவ சொன்ன மாதிரி-புரிதா

  3. rajini pethuraja

    மன ஆழத்தில் சென்று அமர்வதாய்…..வாழ்த்துக்கள்.

  4. P.BALAKRISHNAN

    ONRIN AATHAARATTHIL THAAN INNONRU ENBATHU EYARKAYIN THATTHUVAM, NANRU!-Arima Elangkannan

  5. maga

    அழகானாது காதல் அதை வெளிப்படுத்தி காட்டுவது கவிதை
    அழகானாது நட்பு அதை வெளிப்படுத்தி காட்டுவது தொழமை
    உன் கவிகளை கொண்டு மெருகெற்றியதற்கு நன்றி தொழா

Comments are closed.