நீர் ஓடாத ஆற்றில்
இறங்கி நடந்தால்
ஆற்றின் பொருமல்
கேட்டு விடுகிறது.
தன்னை அலட்சியம் செய்வதாய்
அதற்குக் குமுறல்…
என்ன தைரியம் என
முனகுகிறது…
காற்றும் சேர்ந்து
மணல் வாரி இறைக்கிறது…
வானம் பார்த்து
இரைச்சலிடுகிறது…
தன்னை நிரப்பச் சொல்லி…
நீரற்ற தருணங்களில்
தாய் மடி போல்
வந்தமர்ந்து போகிறவர்களை
மட்டும்
வாத்சல்யமாய்ப் பார்க்கிறது
நீர் ஓடாத
ஆற்றுப் படுகை!
ஆற்றுப்படுகைகளின் அலறல் சத்தம் தமிழ் நாடு எங்கும் ஒலிக்கிறது. கேட்பதற்கு ஆள் இல்லை.
நமக்கு மணல் அள்ளவே நேரம் போதவில்லையே..அப்புறம் எப்படி ஆற்றின் அலறலைக் கேட்பது ??