கவிதைகள்

பகல் மட்டும்

பனி விழும் இரவைக் கூட
பகலாக்கத் துணிந்தேன்!
பகலில் தானே உன்னை
பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது!

இடற்கல்

உன்
கால் கல்லில் இடற
பதறிப் போனேன்,
நீ போன பின்பு
கல்லைப் பெயர்த்து
கவனமாய் பாதுகாத்தேன்,
என்னை இடறிய உன்னை
இடறிய கல்லல்லவா அது!

முற்றும் முயற்சி

உன் கவனம் திருப்ப
நான் எடுக்கும் முயற்சிகள்
எல்லாம் உன் புன்முறுவலுடன்
முற்றுப் பெறுகின்றன.”

About The Author

18 Comments

  1. R. Mahendran

    எளிமையும் இனிமையும் அமைந்த அருமையான கலவை இந்த படைப்பு…

  2. Akmal Jahan

    கவிதைகள் மிகப் பிரமாதம்.மெல்லிய கவிதைகளை சுவாசித்த திருப்தி கிடைக்கிறது.

  3. Kavitha Nagarajan

    எளிமையான கவிதைகள்…. இனிமையான வார்தைகள்…

  4. Kavitha Nagarajan

    எளிமையான கவிதைகள்…. இனிமையான வார்தைகள்…

  5. Ravikumar

    அருமையான கவிதைகள்.இது போன்ற நல்ல எளிமையான கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்

  6. umapathy

    இது போன்ற கவிதைகளை வாசிக்கும்போது தான் காதல் மேல் காதல் பிறக்கிறது

  7. pratheep

    உன் முகம் ப்ர்க்கும் என் முகம் சிலெக்கெரது என் என்ரல்

  8. Vigneshwar

    எளிமையும் இனிமையும் அமைந்த அருமையான கலவை இந்த படைப்பு…

Comments are closed.