1. தெருவில் எது போனாலும்
வீட்டுக்குள் இருந்தபடியே
யூகிக்க முடிகிறது..
மணி சத்தம் கேட்டால்
‘சைக்கிள் பால்’
படிகளில்
‘சர சரவென செருப்பு சத்தம்’ எனில்
பேப்பர் பையன்..
தட தடவென உருளும் சத்தம்
என்றால்
கேஸ் சிலிணடர்..
ஆனால்
வீட்டுக்குள்தான்
மனிதர்களைப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை..
‘உம்’மென்று இருக்கும்
அவர்கள் முகத்தை வைத்து!
மனிதர்களைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளும் மனிதர்களும் இருந்தால் உலகம் சொர்க்கம்தான். கவிதை அருமை.