கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!
வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் – நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.
ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!
நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.
நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!
நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“
அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"
அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!
நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.
இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் – ஏதாவது வாங்குவதற்காக!
எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக் மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் ‘ஒரே சாமானாக’ இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.
அதனால் அவள் பிறந்த நாளுக்கு ‘எலெக்ட்ரிக் நாற்காலி’ வாங்கலாம் என்றிருக்கிறேன்.
என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.
ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள், குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."
"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.
“
இந்த இனயதலம் மிகவும் பயனுல்லதக உல்லது. இப்படிக்கு கொமதி
எல்லாம் பழய ஜோக்
வேர ஏதாவது புதியது போடுங்கய்ய
க க க…… போதுமா
மிகவும் அருமை.
மனைவியிடம் மிகுந்த பாசம் போல் உள்ளது. நன்றி
வேர நல்ல ஜோக் கொடுங்க
மனைவியிடம் மிகுந்த பாசம் போல் உள்ளது.எல்லாம் பழய ஜோக்
வேர ஏதாவது புதியது போடுங்கய்ய,வேர நல்ல ஜோக் கொடுங்க
நல்ல ஜோக் ஆனால் இப்படியான மனைவிமார்கள் எங்கிருக்கிறார்கள் நான் கண்டதில்லை