ஊரலசி உறவலசி
உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
பசுங்கிளியக் கண்டெடுத்து
வேரலசி விழுதலசி
வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
அணிவகுப்பார் பெண்பார்க்க
மூடிவச்ச முக்காடு
முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
தரிசனமும் கிடையாது
ஆடியோடி நிக்கயிலே
ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
உதைபடவும் வழியுண்டு
பாத்துவந்த பெரியம்மா
பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
நல்லழகுப் பெண்ணென்பார்
ஆத்தோரம் அல்லாடும்
அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
முடியாது மாத்திவைக்க
நாளெல்லாம் பேசிடுவார்
நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
பரிசந்தான் போட்டிடுவார்
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“
சினிமாப் பாடல் போல் சந்தம் மிகுந்து வாசிப்பிற்கு அழகு சேர்க்கிறது. ஆனால் ஊர் அலசி, உறவு அலசி என்பது ஒன்று சேர்ந்து ஊரலசி, உறவலசி என்று நிற்பதில் இலக்கணப்பிழை இல்லாதிருப்பினும் மனம் ஊரலசி” என்பதை ஒற்றை வார்த்தையாய்க் கருதி பொருள் தேடி அலைகிறது..
அத்தான், என்னத்தான் எனும் “தான்” வரிசையிலும், அத்திக்காய், ஆலங்காய் எனும் “காய்” வரிசையிலும் புஹாரியின் “அலசி” வந்து நிற்கட்டும்.புதிய முயற்சியாய்க் கொள்ளலாம்..
“