கத்திரிக்காய் வறுவல்

தேவையானவை:

கத்திரிக்காய் – கால் கிலோ,
கடலைமாவு – 2 தேக்கரண்டி,
சோளமாவு – 1 தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

அரைக்க:
மிளகு – அரை தேக்கரண்டி,
சோம்பு – கால் தேக்கரண்டி,
பட்டை – 1,
இஞ்சி – பூண்டு விழுது – அரை தேக்கரண்டி.

செய்முறை:

கத்திரிக்காயை நீள நீளமான, மெல்லிய துண்டுளாக நறுக்கிக் கொள்ளுங்கள்! அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடுங்கள். ஆனால் மிகவும் குழைய விடாமல், சரியான பதத்தில் எடுத்து, நீரை வடித்துவிடவேண்டும்.

பிறகு, கத்திரிக்காயுடன் அரைத்த மசாலா, சோளமாவு, கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

இந்தக் கத்திரிக்காய் வறுவல் வழக்கத்தை விடப் பிரமாதமாக இருக்கும். சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதுங்கள்!

About The Author