கத்தரிக்காய் ரசவாங்கி

தேவையானவை:

கத்தரிக்காய் – அரை கிலோ,
பாசிப்பருப்பு – கால் கோப்பை,
துவரம் பருப்பு – கால் கோப்பை,
கடலைப்பருப்பு – கால் கோப்பை,
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு.

பொடிக்க:

காய்ந்த மிளகாய் – 8,
தனியா – ஒரு மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

  • பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் குக்கரில் வேகவையுங்கள்.
  • கத்தரிக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
  • வாணலியை வைத்து, நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துக் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  • வெந்ததும், வெந்த பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, பிறகு பொடி தூவி, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்க வேண்டியதுதான். சுடச் சுட ரசவாங்கி தயார்!
  • சுவையான இந்தக் கத்தரிக்காய் ரசவாங்கியைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author

1 Comment

  1. vettriyarasan

    நீங்க எழுதர கைமணம் விடுமுறை நாட்களில் செய்து சுவைக்க
    பயன்படுகிறது

Comments are closed.