தேவையான பொருட்கள்:
கண்டென்ஸ்ட் மில்க் – 1 டின்
துருவின தேங்காய் – 1 கப்
ஏலக்காய் – 1/2 டீ ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு பின் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
பதினைந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பின் ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.
சுவையான கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு தயார்.
“