கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

முயன்றால் முடியாததென்ன?

ராஜஸ்தானில் கிராமப்புற பெண்கள் பணியாற்றும் பெண்களாலேயே நடத்தப்படும் பி.பி.ஓ. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது பகார் கிராமம். இங்குள்ள பி.பி.ஓ. நிறுவனத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 38 பெண்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் குறைந்தது 10ம் வகுப்பு தேறியவர்கள்; மிகவும் கட்டுப்பாடான கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள். இதற்காக, இவர்கள் தங்களின் ஆங்கில பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டுள்ளனர். கம்ப்யூட்டரையே பார்த்திராத இந்தப் பெண்களுக்கு போதுமான பயிற்சி கொடுத்தபின்பு அவர்கள் படித்த நகர்ப்புற பெண்களுக்கு இணையாகத் தங்களால் பணியாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

*****

13 – ஒரு பாவப்பட்ட எண்ணா?

ஏசு பிரானின் இறுதி விருந்தில் 13 பேர் கலந்து கொண்டதிலிருந்துதான் எண் 13 ஒரு துரதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால், அதற்கு பல நுற்றாண்டுகளுக்கு முன்பே 13 பற்றிய மூட நம்பிக்கைகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது13பற்றிய 13 மூட நம்பிக்கைகள் சில:

1. 13 ஒரு துரதிருஷ்டமான எண்.

2. 13 பேர் ஒரு விருந்து மேஜையில் அமர்ந்தால் அதில் ஒருவருக்கு ஓராண்டுக்குள் துன்பம் நேரிடும்.

3. மாதத்தின் 13வது நாள் அதிர்ஷ்டமற்றது

4. வெள்ளிக்கிழமையும் 13ந் தேதியும் சேர்ந்து வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அதிகமான கஷ்டங்கள்!

5. 13ந்தேதி ஒரு பயணத்தைத் துவங்குவது நல்லதல்ல.

6. ஒரு அடுக்கு மாளிகைக் கட்டிடத்தில் 13வது மாடி அதிர்ஷ்டமற்றது.

7. 13வது எண் கொண்ட அறையும் அப்படித்தான்.

8. ஒரு தெருவில் 13 வது எண் கொண்ட முகவரி நல்லதல்ல

9. 13 படிகள் கொண்ட மாடி கூடாது..

10. ஒரு கடிகாரம் 13 முறை அடித்தால் ஒரு துர்சம்பவம் நேரும்

11. உங்கள் பெயரில் 13 எழுத்துக்கள் இருந்தாலும் ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 13 வந்தாலும் தீமை

12. 13 நாணயங்களை உங்கள் பையில் வைத்திருந்தால் அதில் ஒன்றைக் குறைக்கவும் அல்லது அதிகப்படுத்தவும்!

13. ———– (நல்லதல்ல என்பதால் நாம் எதையும் இங்கு சொல்லவில்லை!!)

(Nathaniel Lachenmeyer அவர்களின் 13-The World’s most popular superstition)

*****

கண்(ணாடி) பேசும் மொழி!

உடல் மொழியைப் பற்றி நாம் நன்றாகவே கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் பேசுகையில் நமது உடல் மொழி மூலமாக 50 சதவிகிதம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நமது உடல்மொழியில் நாம் அணியும் கண்ணாடி மூலமாகக் கூட நமது எண்ணங்களை வெளிப்படுத்துகிறோமாமே!

பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று நமது கண்ணாடியைக் கழற்றினால் நாம் ஏதோ டென்ஷனில் இருக்கிறோம்.

சில சமயம் கண்ணாடியின் ஃபிரேம் பகுதியினை வாயில் கடித்த வண்ணம் இருந்தால் உடனடியாக எந்த பதிலையும் எதிராளிக்கு தர விரும்பவில்லை என்று பொருள்.

மூக்குக் கண்ணடியை கழற்றி உடன் மீண்டும் போட்டுகொண்டால் புதிதாக உரையாடலை புதுக்கருத்துக்களோடு தொடங்க விரும்புவதைக் காட்டுகிறது.

கண்ணாடியை மூக்கின் நுனியில் பொருத்திக்கொண்டால் எதிராளி சொல்வதை ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

கண்ணாடியை இரண்டு கைகளாலும் கழற்றி கரங்களில் வைத்துக் கொண்டால் எதிராளி பேசுவதை கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம்.

பேசும்போது கண்ணாடியை துடைத்துக் கொண்டால் பேசுவதைக் கேட்க ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.

கண்ணாடியை மடித்து மூடி வைத்துக் கொண்டால் தான் ஒரு தீர்மானத்திற்கு வந்து உரையாடலை முடித்துக் கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கிறது.

(ஆமாம், இதைப் படிக்கும்போது கண்ணாடியை என்ன செய்தீர்கள்?)

*****

உச்சம் எது?

நாகரீக உடையின் உச்சம்
ஜிப் வைத்த வேஷ்டி அல்லது லுங்கி

ரகசியத்தின் உச்சம்
வெற்று விசிட்டிங் கார்டைக் கொடுப்பது

சோம்பலின் உச்சம்
காலை வாக்கிங் பயிற்சி செய்வதற்கு லிஃப்ட் கேட்பது

கிறுக்குத்தனத்தின் உச்சம்
வெற்றுத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது

மறதியின் உச்சம்
கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொண்டு இவனைக் கடைசியாக எப்போது
பார்த்தேன்? என்று நினைவுபடுத்திக் கொள்ள முயல்வது

முட்டாள்தனத்தின் உச்சம்
கண்ணாடிக் கதவின் சாவித் துவாரத்தின் வழியாக உள்ளே எட்டிப் பார்ப்பது

நேர்¨மையின் உச்சம்
கர்ப்பமாக இருக்கும் பெண் ஒன்றரை பயணச்சீட்டு வாங்குவது

தற்கொலை முயற்சியின் உச்சம்
குள்ள வடிவமான ஒருவன் நடைபாதையிலிருந்து கீழே விழ முயல்வது

(நன்றி : Dignity dialogue)

*****

பகவத் புராணாவில் இருந்து ஒரு உருவகக்கதை

ஒரு காகம் ஒரு மாமிசத்துண்டுடன்
வானில் பறந்தது.
இருபது காகங்கள் அதைத் துரத்திக்
கடுமையாகத் தாக்கின.
காகம் மாமிசத்தை உதிர்த்தது.
உடன் அதைத் துரத்தியவை
விட்டு விலக அது மட்டும்
சுதந்திரமாக
பயமின்றிப் பறந்தது
காகம் சொன்னது:
‘நான் மாமிசத்தை இழந்தேன்
வானத்தை அடைந்தேன்’

அற்பமான இலக்குகளுக்காக அற்புதமானவற்றை இழக்கலாமா?

(‘ஏழாவது அறிவு’ திரு. இறையன்பு)

*****

கபிலன் கவிதை

‘அப்பாவுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள்
இருந்தும் சந்தேகமில்லை;
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்!’

(தெரு ஓவியம் – யாளி பதிப்பகம்)

About The Author

1 Comment

  1. mahadevan

    Very much impressed with the information. Please post similar bits regularly.
    I would like to see your next more interesting tips on your younger days memories that still continues in your everlasting memory.

Comments are closed.