அடிமைத்தனத்திலிருந்து அரியாசனம் வரை
அமெரிக்க சரித்திர ஏடுகளை ஒரு பறவைப் பார்வையாகப் பார்த்ததின் சாராம்சம் இதோ..
1619 – முதல் ஆப்ரிக்க அடிமைகளின் வருகை
1650 – 1800 : 66 லட்சம் ஆப்ரிக்க மக்கள் பலவந்தமாகப் பண்ணைகளில் உழைக்கக் கொண்டு வரப்படுகிறார்கள்.
1861 – •பிப்ரவரியில் அமெரிக்காவின் பதினோரு தென் பகுதி அடிமை மாநிலங்கள் தனியாகப் பிரிந்து அமெரிக்காவின் கூட்டு மாநிலங்களாகப் பிரகடனம் செய்கின்றன. மார்ச் மாதம் ஆப்ரஹாம் லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பு, ஜா•பெர்சன் டேவிட் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசுக்கு எதிராக கூட்டு மாநிலங்கள் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர்.
1865 – உள்நாட்டுப் போரின் முடிவு – அடிமைத்தனத்தை சட்டவிரோதமாக்கும் அரசியல் சட்ட அமைப்பின் 13வது திருத்தம்
1865 – 1950 : ஆப்ரிக்க இனத்தவரை இனப்பாகுபடுத்துவது தொடர்கிறது. பள்ளிகளில், பேருந்துகளில், உணவு விடுதிகளில் மற்றும் பொது இடங்களில் கறுப்பு இனத்தவரைத் தனிமைப்படுத்துவது தொடர்கிறது. இதை எதிர்த்து அந்த இனத்தவரின் வன்முறை.
1950 – 1960 : இனப்பாகுபாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது – ஆயிரக்கணக்கான கறுப்பு இனத்தவர் புதுமை எண்ணம் கொண்ட வெள்ளையர்களுடன் இணைந்து புரட்சி செய்கின்றனர் – 110 நகரங்களில் இனக் கலவரம்.
1955 – ரோஸாபார்க்ஸ் என்னும் ஒரு கறுப்பு இனப் புரட்சிப் பெண்மணி பேருந்தில் ஒரு வெள்ளையருக்குத் தன் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்து ஒரு பேரியக்கத்தைத் துவக்குகிறார். சம உரிமைகளுக்கான குரல் கொடுத்த மார்டின் லூதர் கிங் என்னும் கறுப்பினத் தலைவரின் எழுச்சி.
1963 – கறுப்பின மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதை எதிர்த்துத் தென் மாநிலங்களில் வன்முறை. சுமார் மூன்று இலட்சம் மக்கள் கல்வி, வேலை, வாக்குரிமை இவைகளில் சம உரிமை கேட்டு வாஷிங்டன் நோக்கி கூட்டுப் பயணம்.
மிகப் புகழ் பெற்ற மார்டின் லூதர் கிங்கின் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்ற உரை.
1964 – 1967 : குடிமை உரிமைச் சட்டம் கையெழுத்தாகிறது. நிற பேதமின்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் சட்டம் 1965ல் கையெழுத்தாகிறது. இனங்களுக்கிடையேயான கலப்பு மணச்சட்டத்திற்கான தடை விலக்கப்படுகிறது. இன வேறுபாடுகள் எந்த விதத்திலும் தலை தூக்குவது தடை செய்யப்படுகிறது.
1967 – Thurgood marshal என்னும் ஆப்ரிக்க-அமெரிக்கர் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
1968 – மார்டின் லூதர் கிங்கின் மரணம்
1989 – அமெரிக்க ராணுவப் படையின் தலைமைப் பொறுப்பிற்கு முதன் முறையாக ஆப்ரிக்க-அமெரிக்கரான காலின் பவல் தேர்வு. பின்பு அரசின் முதல் செயலராக உயர்வு
நவம்பர், 5 2008 – ஆப்ரிக்க-அமெரிக்கர் ஒபாமா முதன் முறையாக அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவராக தேர்தலில் வெற்றி
(ஆதாரம்: இணைய தளங்கள், Times of India முதலியன)
“
Thanks for the clear and simple presentation of historical events, that is apt for this hour.