கட்டங்கள்

கட்டங்கள் எனக்கு
ரொம்பவே பிடிக்கும்;
பிஞ்சுப் பருவத்தில்
கட்டத்தில் எண்கள் எழுதி…
சிறுமியான பின்
பாண்டி, நாலு கட்டம் விளையாடி…
கல்லூரிப் பருவத்தில்
ரெகார்ட் நோட்டை
கட்டம் கட்டி அழகுபடுத்தி….
கட்டங்கள் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தன….,
திருமண வயது வரும் வரை.

ஏழாம் கட்டத்தில்
"செவ்வாய் " இருப்பதால்
என் வாழ்வில்
"கணவன்" கட்டம்
வெறுமையாய்!!!

About The Author

2 Comments

  1. R. Mahendran

    அருமையான தொடர்புபடுத்தல்…
    ஏழாம் கட்டத்தில் செவ்வாய் புகுந்து என் வாழ்வின் கணவன் கட்டத்தை வெற்றாய்… செய்தது…
    அருமை…

  2. A. ARUNKUMAR

    super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id

Comments are closed.