மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு,
இமயம் தொட முயற்சிக்கும் ஒரு தமிழ் இளைஞனின் மின்னஞ்சல் கவி அமீரகத்திலிருந்து..!
கனவு தொலைத்து
கடல் தாண்டி
ஈச்ச மரத்து
ஈ-க்களுக்கு மத்தியில் நானும் ஒருவன்!
இடம் பெறவில்லை
வாக்காளர் பட்டியலில்
இடம் பெற்றிருக்கிறேன்
அந்நிய தேச வருமானத்தின்
சேமிப்பின் ஓரத்தில்
நொடிகளில் முற்றுப்புள்ளி
இட்டுவிடுவேன்
காலத்தை
விரயம் செய்யாமல்
மின்னஞ்சலிற்கு!
கலாமின் கனவுலகில்
கனவு தேசமொன்றை
நினைவாக்கத் துடிக்கும்
இளைஞர்களின் எழுச்சிக் குரலில்
இதுவும்!
வேண்டுகிறேன் நானும்!
கல்லூரிச் சாலையில்
கள்ளுக்கடைகள்
களையப்பட வேண்டும்!
கள்ளுக் கடைகளை விட்டு
கல்லூரிகளை அரசு
சுமைதாங்க வேண்டுகிறேன்!
மலர்ந்து மறைந்து போன
மழைநீர் சேகரிப்பு
மீண்டும் இம்மண்ணில்
வேண்டுகிறேன்!
கார் கம்பெனிகள்
கடையநல்லூரிலும் கட்டப்பட
வேண்டுகிறேன்!
விளை நிலங்கள்
வீடாகாமல் தடுக்க
வேண்டுகிறேன்!
பசுமை தொகுதியென்று
பாராளுமன்றமும் பேச
வேண்டுகிறேன்!
உலக க் கோப்பையில்
தமிழன் ஒருவனாவது…?
நிலைமாற வேண்டுகிறேன் !
கடையநல்லூரிலும் ஒருவன்
கால் பதித்திருக்கிறான் என்று!
மகளிர்க்கென அரசுக் கல்லூரி
கவலை கொண்ட பெற்றோர்களுக்காக
வேண்டுகிறேன்!
மதங்கள் கடந்து
மாற்றுத் திறனாளிக்கும்
மறுவாழ்வளிக்கும்
"அமர் சேவா சங்கம்"
மேலும் வளம் பெற
வேண்டுகிறேன்!
ஐந்தாண்டுகளில்
அமைச்சரவை யையே
நலம் பெற செய்த
சட்டமன்ற உறுப்பினர்
என்ற செய்தி வேண்டுகிறேன்!
வேண்டுகிறேன்..!
இன்னும் நலன்கள் பல!
தங்கள் நலம்
எங்கள் நலத்தால்
வளம் பெற
வேண்டுகிறேன்!
அடுத்த தேர்தலிலாவது
நானும் வாக்களிக்க
வேண்டுகிறேன்!
எனது மின்னஞ்சலிற்கு
எழுந்து நின்று நிமிடம்
இரண்டு அஞ்சலி செலுத்தாமல்
செயல்படுத்துவீர்கள்
என்றதோர் நம்பிக்கையில்
துடித்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களில்
நானும் ஒருவன்
தமிழன்!
எனது மின்னஞ்சலிலோ, அதை வெளிப்படுத்தியதிலோ ஏதேனும் தவறு இருப்பதாகின், மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்களின் பொன்னான நேரம் செலவழித்ததற்கு நன்றி சட்டமன்ற உறுப்பினர் அவர்களே..!
என்றென்றும் வேண்டுகிறேன்
செல்வன். மா.மணிகண்டன்
நன்றி…!
நன்றி…!
செல்வன்.மா.மணிகண்டனின் வேண்டுகோள் மிகவும் நியாயமானதே. கள்ளுக் கடைகளை விட்டு விட்டு கல்லூரிகளை அரசு சுமை தாங்க வேண்டுகிறேன்” ஒரு அரிய கருத்தாகும். இலவசமாகக் கிடைக்கும் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. தவறான வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, குடிமக்களைக் குடியராக்கக் கூடாது. கல்வியை இலவசமாகத் தரவேண்டும். வ.க.கன்னியப்பன்”