அன்போடு எனை வளர்த்த அன்னைக்கு
ஒரு கடிதம் எழுதவென மனம் துடிக்க
எடுத்தேன் ஒரு காகிதத்தை….
கொப்பியிலோ காகிதம் கையிலையோ பேனா….
சுகங்கள்… சுமைகள்….
துன்பங்கள்.. துயரங்கள்..
நீண்டநாள் பிரிவின்….
நினைவழியா நினைவுகள்…என
அடுக்கடுக்காய் பல நினைத்து….
சிவமயமும் இட்டாச்சு….
திகதியும் போட்டாச்சு…
அன்புள்ள அம்மா….என்று தொடங்கி…
அனைத்தும் தான் எழுதி…
இப்படிக்கு உங்கள் மகள்….
முடித்து கையெழுத்தும் வைச்சாச்சு….
மீண்டும்… மீண்டும் படித்து….
மனதில் திருப்தி வர…
நான்காக மடித்து…
என்வலப்தனிலும்
வைத்து விட்டேன்
அகம் மிக மகிழ்ந்தேன்…
என் அறியாமையை அறியாமலே…
கந்தசாமிப் புலவருக்கென கங்கையில்
விடுத்த ஓலையில் கூட…
விபுலானந்தர் முகவரி
இட்டுத்தானே அனுப்பினார்…
அமரர் உலகில் இருக்கும்…என்
அன்னைக்கு….
ஆசையோடு நான் எழுதிய கடிதத்திற்கு…
எந்த முகவரியை இடுவது….
முகவரியோ தெரியாமல்….
ஒருவிதமும் புரியாமல்…
முட்டாள்தனமாய்….
எழுதிய கடிதமது…
பக்குவமாய் இன்றும்…
என்னிடமே…….
தர்ஷினி உங்கல் கவிதை மிகவும் அர்ப்புதம்.மகல் அம்மாவின் மீது வைத்து இருக்கும் பாசம் மட்ரும் பிரிவை மிகவும் அழகாக உரைத்துல்லீர்கல்
நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள் தர்ஷினி
உங்களின் கருத்துக்கு நன்றிகள்
Nice Nice
அம்மா என்னும் முதல் தெய்வம்…
வேதனைகளைச் சுமத்திருக்கும் பாசக்கவிதை…
நன்று..