தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 1 கோப்பை,
பச்சை மிளகாய் – பத்து,
பெருங்காயம், உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – பொறிப்பதற்குத் தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை.
செய்முறை:
கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய கடலைப் பருப்பில் பெருங்காயம் சேர்த்து ரவை பதத்தில் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாகக் கலந்து, வடைகளாகத் தட்டிச் சூடான எண்ணெயில் பொறித்தெடுங்கள்.
சாப்பிட்டுப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
மசாலா வடை ரெசிபெ என்ன விஷேஷம் ? அம்பது வருஷம இருக்கே