மழை பெய்து ஓய்ந்த நிமிடம்..
அலுவலக ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்தேன்.
எதிர் மாடியில்
சுவற்றின் விளிம்பில்
அணில் ஓடியது.
செடிகளின் இடையே
குருவிகள் பறந்தன,
தரைக்கும் உயரத்திற்குமாய்.
பறவைகளுக்கு யாரும்
குடை பிடிப்பதில்லை!
அணில்களுக்கும் தான்..
ஈரம் படிந்த தரையைத் தொட
விரல்களால் முடியவில்லை..
இருந்தது மூன்றாவது மாடியில்.
மாலையில் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது
நினைவிலிருக்குமா?
ஈரத்தரையும்..
ஓடிய அணிலும்..
குருவிகளூம்..
இன்னொருவர் நுழைய முடியாத
மனிதக் குடைகள் மட்டுமே
அப்போது என்னைச் சுற்றி
நிற்கும்!
கவிதை நன்றாக இருக்கிறது . காட்சி மனதில் படர்கிறது.
மிகவும் அருமை படிக்க ருசிக்க
so nice
tells the reality of todays mechanical world