ஒரு காதல் கவிதை…

குளத்தோர செண்பகப்பூ
கடத்திவிட்ட உன் அழகை
திருப்பிக் கேக்காம வந்தவளே….

அள்ள அள்ள உன் அழகு
அருவியாய் பொங்கிவந்து
தூக்கிப் போன என் மனச
தூதனுப்ப மறந்தவளே…

கொத்திக் கொண்டு போன மனச
திருப்பிக் கேக்க வந்த என்னை
வெடிப்பு விட்ட நிலத்தின் மேல்
விழுந்து புரளும் மழை நீர் போல்
நீ கட்டிக் கொண்டு கண்ணீர் விட….

சிலிர்த்துப் போன என் காதில்
மெல்லமாய் காதல் சொல்லி
செத்துவிட்ட என் இதயம்
உன் எச்சில் பட்டு உயிர் பெற்றதே….

கர்வம் கொண்டு நான் வாழ
காரணமாய் இருந்தவளே..

அந்தி மாலை வேளையிலே
அரச மரத்தடியினிலே
அமைதியாய் நீ சொன்ன வார்த்தையில்
புயலடித்த பூங்கொத்தாய்
போனதடி என் வாழ்க்கை…

உயிரோடு எரித்துவிட்டு
அப்பனுக்கு மகளாகி
அறுத்துவிட்டுப் போனவளே…

அறுத்துப் போட்ட கோழி போல
துடிக்குதடி நீ எச்சில் பண்ணி
வீசிப் போட்ட என் மனசு…

செவ்வாழைத் தோட்டத்திலே
காத்திருந்த அரளி விதை
என் காதல் வலி நீக்கி விட…

செத்து விட்ட என்னோட
செண்பகமும் சேர்ந்துகொண்டு
சொர்க்கத்தில் காத்திருக்கு
செல்லமே நீ வர…

என் சாவுக்கு நீ அழுத
சத்தம் கேட்டு
உன் பிள்ளையாய்
பிறந்துவர துடித்திருக்கேன்..
கடைசியாய் நீ கொடுத்த
திருட்டு முத்தம்
நம் உறவை சொல்லித் தடுக்குதடி….

About The Author

7 Comments

  1. kunashunthary

    வணக்கம் நண்பரே…………
    மிகவும் அழகான கவிதை வரிகள்
    மனதை அழமாக வருடி விட்டது,

  2. Arockia Raj...

    னானும் காதலால் இறந்து . வாளும் நடை பிண்ம்

  3. prithiviraj

    உங்கலுடைய கவிதைகல் அனைட்தும் சுட்தமாக நல்லாவே இல்லை……………

  4. kotteswaran

    கடைசி பத்தி மிக மிக மிக நன்றாக உள்ளது

Comments are closed.