தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு -1 கப்,
மஞ்சள்பொடி – ஒரு தேக்கரண்டி,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
கோலாப்பூர் வெல்லம் – வெந்த பருப்பிற்குத் தக்கவாறு,
ஒப்பட்டு ரவை – 1/4 kg,
மைதா – 1/4 kg ,
எண்ணெய் – தேவையான அளவு ,
தேங்காய்த்துருவல் – ஒருமூடி
ஏலக்காய் -மூன்று,
ஒப்பட்டு தட்டுவதற்கு பேப்பர் – தேவையான அளவு,
கசகசா -ஒரு மேசைக்கரண்டி ,
தோசைக்கல்.
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தக்க அளவு நீரை சுட வைத்து கொதி வந்ததும் பருப்பைக் கழுவி மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சேர்த்து கிள்ளும் பதத்தில் வேக வைக்கவும். மைதாவையும், ஒப்பட்டு ரவையையும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக்கொண்டு நான்கைந்து மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நனைத்து அரை மணி நேரம் தனியே ஊற வைக்கவும். வெந்த பருப்பு சூடாக இருக்கும்பொழுதே வெல்லத்தை பொடித்துப்போட்டு தேங்காய்த் துருவலை சேர்த்து அடுப்பில் மட்டான தழலில் கிளறிக்கொள்ளவும். ஏலக்காயை உரித்து சேர்த்து கல்லுரலிலோ (அ) கிரைண்டரிலோ நைசாக அரைத்துக் கொள்ளவும். மைதா ரவையை நன்றாக இழுத்துப் பிசைந்து சற்று உரலில் போட்டு இடித்து பதமாக பிசைந்துக் கொள்ளவும். கல்லை சுட வைத்து பேப்பரில் மைதா ரவை விழுதை இட்டு நடுவில் பூரண உருண்டைகளை வைத்து மூடி தட்டி அப்பளக் குழவியில் மிருதுவான ஒப்பட்டுக்களாக செய்து இருபுறமும் சுட்டு பரிமாறவும்.”